Friday, November 29, 2013

ANGRY

ஒரு இளஞ்ஜோடியருக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை பாக்கியமே இல்லை. அதனால் அவர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்தனர். ஒரு நாள் அழகிய நாய் குட்டியை வாங்கி வந்தனர்,அதை தங்கள் மகன் போல வளர்க்க ஆரம்பித்தனர். அந்த நாய் குட்டியும் அவர்களுடன் விளையாடி மகிழ்ந்தது.ஒரு முறை திருடன் அவர்கள் வீட்டிற்கு வந்தபோது தன்னுடைய எஜமானருக்கு விசுவசாமாக நடந்து கொள்ள தன் உயிரையும் பொருட்படுத்தாமால் அவர்களை விரட்டியது. நாட்கள் உருண்டோடின அந்த குட்டி நாய் நல்ல பெரிய நாயாக வளர்ந்தது. 7 வருடம் கழித்து அந்த தம்பதியனருக்கும் ஒரு மகன் பிறந்தான். இப்போதெல்லாம் அந்த குழந்தையுடன் தான் அந்த தம்பதியினர் நேரத்தை செலவிடுகின்றனர் .நாய் இப்போதெல்லாம் தனிமையிலே தன் பொழுதை கழிக்க வேண்டியதாயிற்று. அவர்கள் வளர்த்த நாய்க்கு அந்த குழந்தை மேல் பொறாமை உண்டாயிற்று ஒரு நாள் அந்த தம்பதியினர் குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்து விட்டு மாடியில் நின்று பேசி கொண்டு இருந்தனர். சிறிது நேரம் கழித்து நாயின் சத்தம் கேட்டதும் மேலே இருந்து இறங்கி ஓடி வந்தனர். படி அருகில் நாய் வாயில் ரத்தக்கறையுடன் நின்று கொண்டு இருந்தது.இதைப் பார்த்ததும் அதன் எஜமானர் ஓடி சென்று துப்பாக்க்கியை எடுத்து வந்து நாயை சுட்டு வீழ்த்தினார். பிறகு வீட்டின் உள்ளே சென்று பார்த்த அவர்களுக்கு ஒரே அதிர்ச்சி.குழந்தையின் அருகில் நல்ல பாம்பு இரண்டு துண்டுகளாக கிடந்தது .குழந்தையை காப்பாற்ற அவர்கள் வளர்த்த நாய் அந்த பாம்பை கடித்து போட்டுள்ளது, அந்த பாம்பின் ரத்தக் கறை தான் நாயின் வாயில் இருந்தது என்று அப்போது தான் அவர்களுக்கு புரிந்தது. தங்கள் குழந்தையை காப்பாற்றிய நாயை அநியாயமாக கொன்று விட்டனே என்று கதறி அழுதனர். முன்கோபம் முட்டாள் தனத்தில் போய் முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்து காட்டு. எப்ப நாம ஒரு முடிவு எடுப்பது என்றாலும் நன்றாக ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்.

Living Together

செய்தி : NEWS "திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது குற்றமல்ல # உச்ச நீதி மன்றம்"




நாகரீகத்திற்கு சமாதி கட்டிவிடுவர்கள், 

இவர்கள் குழந்தைகளுக்கு இந்த தீர்ப்பை 

இவரகளுடைய மனைவி சொல்லிதரட்டும் 

"திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது 

குற்றமல்ல என்று "


இப்படி நாலு தீர்ப்பு சொல்லட்டும் , இந்திய 

கலாச்சாரம் பேசுபவர்களும் தீவிர வாதிகளாக 

மாறி விடுவார்கள் , ஆங்கில நாட்டவர்கள் 

நம்மை பார்த்து ஒருவனுக்கு ஒருத்தி , 

திருமணம் என்பது வேண்டும் என்கிறார்கள் 

ஆனால் நாம்...............வேதனை படவேண்டும் 

ஒரு தீர்ப்பு சொல்லும்போது  அது நம் 

சந்ததியர்க்கும் பொருந்தும் என்ற எண்ணம் 

வேண்டும்.

 

பொன்மொழிகள்

முயற்சி பொன்மொழிகள்

1. முயற்சி திருவினையாக்கும்!
- தமிழ்நாடு

2. ஓடிச் செல்பவனுக்கு அகப்படும்!
- இந்தியா

3. மற்றொருவன் மூக்கினால் ஒருவன் மூச்சுவிட முடியாது!
- தாய்லாந்து

4. முன்னால் தாவுவதற்குச் சிறிது
பின்னால் செல்ல வேண்டும்!
- பிரான்ஸ்

5. வாழ்வதன் பொருள் இடைவிடாது முயற்சி செய்தல்!
- ஜெர்மனி

6. முயற்சி இல்லாத நம்பிக்கை, கப்பலில்லாத கடல் யாத்திரை போன்றது! - வேல்ஸ்

7. அடி மேல் அடி விழுந்தால் ஆப்புக்கட்டையும் இறங்கி விடும்!
- வேல்ஸ்

8. கடவுள் ஒருவனுக்குப் புதையலைக் காட்டினால், அவனேதான் அதைத் தோண்டி எடுக்க வேண்டும்!
- ùஸக்

9. நேரமும் ஓய்வும் இருந்தால் தவளையும் ஒரு மைல் துள்ளிச் செல்லும்! - செர்பியா

10. சோர்வடைந்த பின்னும் ஒருவன் நெடுந்தூரம் செல்ல முடியும்!
- பிரான்ஸ்.

Thursday, November 28, 2013

ஓம் எப்படி உச்சரிக்க வேண்டும்

ஓம் எப்படி உச்சரிக்க வேண்டும் ???

+ம் = ஓம் om
வின் உச்சரிப்பு குறைவாகவும், ‘ம்இன் உச்சரிப்பு நீண்டாதகவும் இருக்க வேண்டும்.

ஓம், ஓம், ஓம்,… என்று தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். சப்தமாக உச்சரிப்பதைக் காட்டிலும், மனதிலேயே உச்சரித்தல் நலம்.

ஓ என்று தொடங்கும்போது மனதில் தங்களுக்கு ஒரு இஷ்ட தேவதையோ அல்லது வேறு எந்த ஒரு பொருளையோ நினைக்க துவங்கிக் கொண்டால், ’ம்இல், அந்த நினைவினை தொடர வேண்டும்.
இதோடு சேர்ந்து நாசிப்பயிற்சியும் செய்தால் மேலும் பயனுண்டு.

மூச்சை உள்ளிழுக்கும் போது, மனதில் வைத் துவக்கிக்கொண்டவாறு, தாங்கள் தேர்வு செய்த பொருளை மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும்.
அடுத்து மூச்சை வெளி விட்டவாறு ம்மைத் தொடரவேண்டும். எண்ணத்திலும் நிலைநிறுத்திய பொருளை தொடர்ந்தவாறு.

இவ்வாறு தொடர்ந்து பயிற்சி செய்தால், வெகு சீக்கிரமாக தாங்கள் எண்ணத்தில் நிறுத்திய பொருள் அல்லது இஷ்ட தேவதையினை மனதில் ஒருமுகப்படுத்தும் சித்தி கிடைக்கும். வேறு மாற்று சிந்தனைகள் ஏற்பட்டு மனதை அலைக்கழிக்கவிடாமல் நெருங்கிய பொருள் கைக்கிடைக்கும். அந்த நெருங்கிய பொருள் நீங்கள் யாரென்ற தன்னறிவானால், மீளாத் துயர்களில் இருந்து விடுதலை பெறும் பாதையை அறிந்து கொள்ள முடியும்..

ஓம் என்பது இந்து சமயத்திலுள்ள ஒரு புனிதமான குறியீடு மற்றும் ஒலியாகும்.இக் குறியீடு இந்து சமய நூல்கள் எழுதுவதற்கு முன்பாகவும், இதன் ஓசை மந்திரங்கள் உச்சரிப்பதற்கு முன்பாகவும் பயன்படுத்தப்படும்.மான்டூக்கிய உபநிடதம் முழுமைக்கும் ஓம் குறித்த விளக்கங்கள் காணப்படுகின்றன. குமரிக்கண்டத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் மயன் எழுதிய நூலில் ஓம் என்ற ஒலி உள் ஞானத்தை எழுப்பும் எனவும், அது ஒளிவடிவமாகவும் இருக்கும் என்றும் கூறப்பட்டுளது.

"
ஓம் ஒலி கேட்டுணர்ந்தால் உள்ளொலி ஞானம் தோன்றும்,
ஓம் ஒலி கண்டுணர்ந்தால் ஒளியொளிர் உருவே தோன்றும்,
ஒளியொளிர் உருவந்தானே ஆடலன் ஆடலன்றோ"

—(
மய விஞ்ஞானம்)

ஓம் என்பதன் மிக சுருக்கமான/நுட்பமான பொருள் = "உயிர்களுக்கும் இறைவனுக்கும் உறவு!"
ஓம் என்பது அழகானதொரு இறை-ஒலித் தத்துவம்! சமணம் (ஜெயின்), புத்த மதம், சீக்கியர்கள், சைனாவில் கூட "ஓம்" சொல்வார்கள்

, , ம் என்று மூன்றெழுத்துக்கள் கொண்டது போல் இருப்பினும், ஓம் என்பது ஓரெழுத்து தான் (ஏகாட்சரம்)! தமிழில் ஓங்காரம்! பிரணவம் என்று வடமொழியில் சொல்வார்கள்! 

*
= இறைவன் (""கர முதல எழுத்தெல்லாம்! அவனைக் குறிப்பதெல்லாம் ""-காரமாய்த் தான் இருக்கும்)
*
= நாம் (எம், உம், நம், நாம் என்று நம்மைக் குறிப்பதெல்லாம் ""-காரமாய்த் தான் தொக்கி நிற்கும்)

அந்த ""-வையும், இந்த ""-வையும் எப்படிச் சேர்ப்பது? - "" கொண்டு சேர்க்கணும்! ""றவைக் கொண்டு சேர்க்கணும்!

*
= உறவு! ""கார-""காரத்தை இணைக்கும் உறவு! 

உந்தன்னோடு =
உறவேல் =
நமக்கு = ம்
+ + ம் = ஓம்!

*
= பரமாத்மா
*
= உறவு
*
ம் = ஜீவாத்மா



ஓம் பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சி தரும் புது உண்மைகள்!!!

ஓம் என்பது ப்ரணவம்
ப்ரணவம் என்பது எந்த ஒரு ஒலிக்கும் காரணமாக இருப்பது ப்ரணவம் எனப்படும். படைப்பு அனைத்தும் ஓம் என்ற சொல்லில் அடங்கும் ஓம் படைப்பின் ரகசியம் ஆகும் ஓம் என்பதை பிரித்தால் அ + + ம் என்று பிரிக்கலாம்.

அ என்பது படைத்தல் / பிரம்மா / இறந்தகாலம்.
உ என்பது காத்தல் / விஷ்ணு / நிகழ்காலம்
ம் என்பது அழித்தல் / சிவன் / எதிர்காலம்

இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் மூன்று தொழிழுக்கு உட்பட்டு இருக்கும். அதாவது உலகத்தில் தோன்றிய அனைத்தும் ஒருநாள் மறைந்தே ஆக வேண்டும் என்பது நியதி . அதனை விளக்குவதே ஓம் என்றும் ப்ரணவம்.

இந்த பிரபஞ்சமும் ஓம் என்பதில் அடங்கும் அ வில் தோன்றி உ வில் இருந்து ( வாழ்ந்து) ம் ல் முடியும் ( மறையும் ). அதனால் தான் நமது ரிஷிகள் ஓம் என்னும் பிரணவமே மொத்த பிரபஞ்சமாக இருக்கிறது என்று கண்டார்கள் .

நாம் சாதாரணமாக எந்த ஒரு சத்தத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் இந்த மூன்று தொழில்கள் வருவதை அறியலாம் . மூன்று தொழில்கள் என்பது பிரணவமே. பிரம்மத்தின் நாதம் ப்ரணவம். பிரபஞ்சத்தின் இயக்கத்தை சப்தத்தில் குறிப்பது தான் ஓம்
ஓம் என்கிற ப்ரணவ மந்திரம் இல்லாமல் எந்த ஒரு மந்திரமும் இல்லை ஓம்-ன் சிறப்பை நமது வேதங்களும் புராணங்களும் கூறியிருக்கின்றன.

Reverend Richard Coles explores the world of spiritual sound and meditation and tries to understand what it is about certain sounds and chants which gives practitioners a sense of proximity to the Divine. He tunes into the Om, a sacred sound in several religions including Hinduism, Sikhism, Jainism and Buddhism and its vibration is believed by many to be healing. He speaks to the Director for the Oxford Centre for Hindu Studies, Shaunaka Rishi Das, who states that Meditation is something we all do from childhood, for example when we are focussing on something we want to buy and how to get it or when we kiss, but that it can be used for greater ends
Richard meets neuroscientist Dr Alan Watkins of Imperial College who has worked with the Dalai Lama and his team in Tibet and found that people who meditate together showed signs of "entrainment" in their brain activity, the same phenomenon that allows flocks of birds or shoals of fish to move together. Is this the sense of "one-ness" people talk about when meditating?
Richard speaks to the expert in comparative religion Martin Palmer who suggests that there is nothing inherently sacred about chanting, but that is a trick whose powers can be harnessed by despots as well as for good.
Richard talks to Jem Finer of The Pogues, writer of their greatest hit The Fairytale of New York about his Longplayer project, a musical composition based on the meditative sound of Tibetan Singing Bowls and designed to play continuously for 1000 years.
Richard also hears from the nuns at Saint Cecilia's Abbey on the Isle of Wight who sing Gregorian Chant everyday in its original form. What does the power of the Mother Note in Gregorian chant have in common with the mantra recitations of the Hindu tradition?