Showing posts with label Tamil Meaning. Show all posts
Showing posts with label Tamil Meaning. Show all posts

Thursday, December 19, 2024

வெற்றிலை பாக்கு

 


மீண்டும் வெற்றிலை பாக்கு போடும் பழக்கத்தை ஆரம்பியுங்கள்  அனைவருக்கும் .சொல்லுங்கள் 


மலட்டுத்தன்மை அறவே இல்லை. கேன்சர் இல்லை, 

சர்க்கரை வியாதி இல்லை, 

இதய நோய்கள் இல்லை ..... 

வெற்றிலை பாக்கு போடுவதை கெட்ட பழக்கமாகவும்  சாராயம் குடிப்பதை சாதாரண பழக்கமாகவும் மா(ற்)றிய குடிகாரர்களின் கூடாரமாய் ஆண்மையிழந்து இயலாதவர்களாய்த்  தமிழ்ச் சமூகத்தின் இன்றைய இளைஞர்கள். 


தமிழ்க் கலாச்சாரத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது "தாம்பூலம்" எனப்படும் வெற்றிலை, பாக்கு. தமிழனின் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள அனைத்து சடங்கு சம்பிரதாயங்களிலும் தவறாமல் இடம் பெரும் ஒரு பொருள் வெற்றிலை பாக்கு, வெறும் வெற்றிலை பாக்கு மட்டுமே மாற்றி ஒரு திருமணத்தையே நிச்சயம் செய்து விடுவான் தமிழன்.


வெற்றிலை பாக்கு போட்டு வளர்ந்த தாத்தா பாட்டி காலத்தில் 

கேன்சர் இல்லை, சர்க்கரை வியாதி இல்லை, இதய நோய்கள் இல்லை 

முக்கியமாக மலட்டுத்தன்மை அறவே இல்லை.


ஆக வெற்றிலை, பாக்கு என்பது பல நோய்களைத் தீர்க்கும் ஒரு அருமருந்து என்பது தமிழினத்துக்கு தெரிந்திருந்ததால் தான், அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறான் தமிழன்.


கலாச்சாரச் சீரழிவும், அன்னிய மோகமும் சேர்ந்து தாம்பூலத்தைக் கெட்ட பழக்கமாக சித்தரித்து நம் இனத்தை நோயாளிகளாய் அலைய விட்டிருக்கிறது.


வெற்றிலையின் மகத்துவத்தை தமிழனை மறக்கடிக்கச் செய்து தம்பதிகளை fertility Centre ( கருத்தரிப்பு மையம்)களை நோக்கி படையெடுக்க வைத்திருக்கிறது.


வாயில் கேன்சர் வந்திடும், பல்லு கரை போகவே போகாது, தவிர "டேய்.. இன்னும் பழைய ஆள் மாதிரி வெத்தலையை போட்டு கிட்டு..

எனச் சொல்லிச் சொல்லியே வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் நம்மிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைக்கப்பட்டு விட்டது.


வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு அதிலும் கல் சுண்ணாம்பு, முத்துச்சிப்பி சுண்ணாம்பு என வித்தியாசம் காட்டி அது மட்டுமா ஏலக்காய், கிராம்பு, சாதிக்காய், என வாசனைப் பொருட்கள் கலந்து வாயில் இட்டு சுவைத்து, முதலில் ஊறும் நீரும், இரண்டாவது ஊறும் நீரையும் துப்பிவிட வேண்டும் என்றும், மூன்றவதாய் ஊறும் நீரே அமிர்தம் என தாம்பூலம் இட்ட வழி முறைகள் சொன்ன சித்த மருத்துவம் இருந்த ஊரில், "ஆங்.. தாம்பூலமா அப்படின்னா?", எனக் கேட்கும் அடுத்த தலைமுறை வந்து விட்டது,


பெருகி வரும் ஆண் மலட்டுத் தன்மை குறிப்பாக விந்தணு உற்பத்தி மற்றும் அதன் Motility குறைதல் இவற்றுக்கு தாம்பூலம் மிக சிறந்த மருந்து.

வெற்றிலையில் உள்ள Hydroxy Chavicol எனும் Phenol Compound ஆனது ஆண்களின் Prostate-ஐ வலுப்படுத்துகிறது, மேலும் Prostate புற்று வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது,


விதைப்பையில் உற்பத்தியாகும் விந்தணுவிற்கு  Prostate-ல் இருந்து சுரக்கும் நீரில் உள்ள Zinc மூலம் தான் உயிரே கிடைக்கிறது, அதாவது Motility உண்டாகிறது, IVF நிகழ்வில் விந்தின் Capacitation நிகழ்வும் முக்கியம், அந்த Capacitation நடக்க Prostate சுரப்பு ரொம்ப முக்கியம் , இதையெல்லாம் தெரிந்ததால் தானோ என்னவோ காதல் மனைவி ஊட்டி விடும் தாம்பூலத்தைச் சிலாகித்துப் பேசியிருக்கிறார்கள் போல,

மலச்சிக்கலா, தாம்பூலத்துடன் கொஞ்சம் அதிகம் பாக்கைச் சேர், வாய் நாற்றமா, லவங்கத்தைச் சேர், வீரியம் வேண்டுமா, சாதிக்காய் சேர் எனச் சொன்ன தமிழ்ச் சமூகம் இன்று Infertility center-களில் முடங்கி கிடக்கிறது.


அடுத்த தலைமுறைக்கு இனியாவது தாம்பூலத்தின் மகத்துவத்தை எடுத்துரைப்போம்...!!

Friday, October 18, 2013

Tamil Meaning

ஆங்கில வணிக சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்கள். நிறுவன / கடை உரிமையாளர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்! 

1 டிரேடரஸ் - வணிக மையம், TRADERS
2 கார்ப்பரேஷன் - நிறுவனம், Corporation
3 ஏஜென்சி - முகவாண்மை , Agencies
4 சென்டர் - மையம், நிலையம், Centre
5 எம்போரியம் - விற்பனையகம் , Emborium
6 ஸ்டோரஸ் - பண்டகசாலை, Stores
7 ஷாப் - கடை, அங்காடி
8 அண்கோ - குழுமம்
9 ஷோரூம் - காட்சியகம், எழிலங்காடி
10 ஜெனரல் ஸ்டோரஸ் - பல்பொருள் அங்காடி
11 டிராவல் ஏஜென்சி - சுற்றுலா முகவாண்மையகம்
12 டிராவலஸ் - போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம்
13 எலக்டிரிகலஸ் - மின்பொருள் பண்டகசாலை
14 ரிப்பேரிங் சென்டர் - சீர்செய் நிலையம்
15 ஒர்க் ஷாப் - பட்டறை, பணிமனை
16 ஜூவல்லரஸ் - நகை மாளிகை, நகையகம்
17 டிம்பரஸ் - மரக்கடை
18 பிரிண்டரஸ் - அச்சகம்
19 பவர் பிரிண்டரஸ் - மின் அச்சகம்
20 ஆப்செட் பிரிண்டரஸ் - மறுதோன்றி அச்சகம்
21 லித்தோஸ் - வண்ண அச்சகம்
22 கூல் டிரிங்கஸ் - குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம்
23 ஸ்வீட் ஸ்டால் - இனிப்பகம்
24 காபி பார் - குளம்பிக் கடை
25 ஹோட்டல் - உணவகம்
26 டெய்லரஸ் - தையலகம்
27 டெக்ஸ்டைலஸ் - துணியகம்
28 ரெடிமேடஸ் - ஆயத்த ஆடையகம்
29 சினிமா தியேட்டர் - திரையகம்
30 வீடியோ சென்டர் - ஒளிநாடா மையம், விற்பனையகம்
31 போட்டோ ஸ்டூடியோ - புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம்
32 சிட் பண்ட் - நிதியகம்
33 பேங்க் - வைப்பகம்
34 லாண்டரி - வெளுப்பகம்
35 டிரை கிளீனரஸ் - உலர் வெளுப்பகம்
36 அக்ரோ சென்டர் - வேளாண் நடுவம்
37 அக்ரோ சர்வீஸ் - உழவுப் பணி
38 ஏர்-கண்டிஷனர் - குளிர் பதனி, சீர்வளி
39 ஆர்டஸ் - கலையகம், கலைக்கூடம்
40 ஆஸ்பெஸ்டரஸ் - கல்நார்
41 ஆடியோ சென்டர் - ஒலியகம், ஒலிநாடா மையம்
42 ஆட்டோ - தானி
43 ஆட்டோமொபைலஸ் - தானியங்கிகள், தானியங்கியகம்
44 ஆட்டோ சர்வீஸ் - தானிப் பணியகம்
45 பேக்கரி - அடுமனை
46 பேட்டரி சர்வீஸ் - மின்கலப் பணியகம்
47 பசார் - கடைத்தெரு, அங்காடி
48 பியூட்டி பார்லர் - அழகு நிலையம், எழில் புனையகம்
49 பீடா ஸ்டால் - மடி வெற்றிலைக் கடை
50 பெனிஃபிட் பண்ட் - நலநிதி
51 போர்டிங் லாட்ஜத்ங் - உண்டுறை விடுதி
52 பாய்லர் - கொதிகலன்
53 பில்டரஸ் - கட்டுநர், கட்டிடக் கலைஞர்
54 கேபிள் - கம்பிவடம், வடம்
55 கேபஸ் - வாடகை வண்டி
56 கபே - அருந்தகம், உணவகம்
57 கேன் ஒர்கஸ் - பிரம்புப் பணியகம்
58 கேண்டீன் - சிற்றுண்டிச்சாலை
59 சிமெண்ட் - பைஞ்சுதை
60 கெமிக்கலஸ் - வேதிப்பொருட்கள்
61 சிட்ஃபண்ட் - சீட்டு நிதி
62 கிளப் - மன்றம், கழகம்,உணவகம், விடுதி
63 கிளினிக் - மருத்துவ விடுதி
64 காபி ஹவுஸ் - குளம்பியகம்
65 கலர் லேப் - வண்ணக்கூடம், வண்ண ஆய்வம்,
66 கம்பெனி - குழுமம், நிறுவனம்
67 காம்ப்ளகஸ் - வளாகம்
68 கம்ப்யூட்டர் சென்டர் - கணிப்பொறி நடுவம்
69 காங்கிரீட் ஒர்கஸ் - திண்காரைப்பணி
70 கார்ப்பரேஷன் - கூட்டு நிறுவனம்
71 கூரியர் - தூதஞ்சல்
72 கட்பீஸ் சென்டர் - வெட்டுத் துணியகம்
73 சைக்கிள் - மிதிவண்டி
74 டிப்போ - கிடங்கு, பணிமனை
75 டிரஸ்மேக்கர் - ஆடை ஆக்குநர்
76 டிரை கிளீனரஸ் - உலர் சலவையகம்
77 எலக்ட்ரிகலஸ் - மின்பொருளகம்
78 எலக்ட்ரானிகஸ் - மின்னணுப் பொருளகம்
79 எம்போரியம் - விற்பனையகம்
80 எண்டர்பிரைசஸ் - முனைவகம்
81 சைக்கிள் ஸ்டோரஸ் - மிதிவண்டியகம்
82 பேக்டரி - தொழிலகம்
83 பேன்சி ஸ்டோர் - புதுமைப் பொருளகம்
84 பாஸ்ட் புட் - விரை உணா
85 பேகஸ் - தொலை எழுதி
86 பைனானஸ் - நிதியகம்
87 பர்னிச்சர் மார்ட் - அறைகலன் அங்காடி
88 கார்மென்டஸ் - உடைவகை
89 ஹேர் டிரஸ்ஸர் - முடி திருத்துபவர்
90 ஹார்டு வேரஸ் - வன்சரக்கு, இரும்புக்கடை
91 ஜூவல்லரி - நகை மாளிகை
92 லித்தோ பிரஸ் - வண்ண அச்சகம்
93 லாட்ஜ் - தங்குமனை, தங்கும் விடுதி
94 மார்க்கெட் - சந்தை அங்காடி
95 நர்சிங் ஹோம் - நலம் பேணகம்
96 பேஜர் - விளிப்பான், அகவி
97 பெயிண்டஸ் - வண்ணெய்கள், வண்ணப்பூச்சு
98 பேப்பர் ஸ்டோர் - தாள்வகைப் பொருளகம்
99 பாஸ் போர்ட் - கடவுச்சீட்டு
100 பார்சல் சர்வீஸ் - சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம்
101 பெட்ரோல் - கன்னெய், எரிநெய்
102 பார்மசி - மருந்தகம்
103 போட்டோ ஸ்டூடியோ - ஒளிப்பட நிலையம்
104 பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரி - நெகிலி தொழிலகம்
105 பிளம்பர் - குழாய்ப் பணியாளர்
106 பிளைவுடஸ் - ஒட்டுப்பலகை
107 பாலி கிளினிக் - பலதுறை மருத்துவமனை, பலதுறை மருந்தகம்
108 பவர்லும் - விசைத்தறி
109 பவர் பிரஸ் - மின் அச்சகம்
110 பிரஸ், பிரிண்டரஸ் - அச்சகம், அச்சுக்கலையகம்
111 ரெஸ்டாரெண்ட் - தாவளம், உணவகம்
112 ரப்பர் - தொய்வை
113 சேல்ஸ் சென்டர் - விற்பனை நிலையம்
114 ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் - வணிக வளாகம்
115 ஷோரூம் - காட்சிக்கூடம்
116 சில்க் அவுஸ் - பட்டு மாளிகை
117 சோடா பேக்டரி - வளிரூர்த்தொழில், காலகம்
118 ஸ்டேஷனரி - மளிகை, எழுதுபொருள்
119 சப்ளையரஸ் - வங்குநர்,
120 ஸ்டேஷனரி - தோல் பதனீட்டகம்
121 டிரேட் - வணிகம்
122 டிரேடரஸ் - வணிகர்
123 டிரேடிங் கார்ப்பரேஷன் - வணிகக் கூட்டிணையம்
124 டிராவலஸ் - பயண ஏற்பாட்டாளர்
125 டீ ஸ்டால் - தேனீரகம்
126 வீடியோ - வாரொளியம், காணொளி
127 ஒர்க் ஷாப் - பட்டறை, பயிலரங்கு
128 ஜெராகஸ் - படிபெருக்கி, நகலகம்
129 எக்ஸ்ரே - ஊடுகதிர்

-தூய தமிழ்ச்சொற்கள்