Wednesday, October 30, 2013

TRUE

TRUE

மிகக் கடினமானவை மூன்று!
1. இரகசியத்தை காப்பது.
2. இழைக்கப்பட்ட தீங்கை மறப்பது.
3. ஓய்வு நேரத்தை உயர்ந்த வழியில் பயன்படுத்துவது.

நன்றி காட்டுவது மூன்று!
1. இதயத்தால் உணர்தல்.
2. சொற்களால் தெரிவித்தல்.
3. பதிலுக்கு உதவி செய்தல்.

பெண்மையை காக்க மூன்று!
1. அடக்கம்.
2. உண்மை.
3. கற்பு.

மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரியவை மூன்று!
1. சென்றதை மறப்பது.
2. நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது.
3. வருங்காலத்தைப் பற்றிச் சிந்திப்பது.

இழப்பு மூன்று!
1. சமையல் அமையாவிட்டால் ஒருநாள் இழப்பு.
2. அறுவடை சிறக்காவிடில் ஓராண்டு இழப்பு.
3. திருமணம் பொருந்தாவிட்டால் வாழ்நாள் முழுவதும் இழப்பு.

உயர்ந்த மனிதனின் வாழ்வு மூன்று!
1. அவன் ஒழுக்கத்தோடிருப்பதால் கவலையற்றிருப்பான்.
2. அவன் அறிவாளியாயிருப்பதால் குழப்பங்களற்றிருப்பான்.
3. அவன் துணிவாக இருப்பதால் அச்சமின்றியிருப்பான்.

Sunday, October 27, 2013

Co-op Tex

எப்படியும் புது ஆடைகள் எடுக்கத்தான் போறீங்க..

500 ரூபாய் சேலையை 1500 ரூபாய்க்கு விற்கும் (நடிகர்கள் & விளம்பரங்களுக்கு யார் குடுப்பாங்க!) இன்றைய பண்டிகை சூழலில்.. நமது பணம் உரியமுறையில் செலவளிக்கப்படுவது இன்பம்!

எனவே அனைவரும் ஒரு சேலையையாவது சட்டையையாவது கோ-ஆப்-டெக்ஸ் ல வாங்குங்க மக்கா!

அதுவும் இந்த முறை முன்னாள் மதுரை ஆட்சியர் சகாயம் அவர்கள் தற்போது எம்.டி.ஆக.. பேக்கேஜிங் முதல் டிசைன்கள் வரை பலவித புதுமைகளை புகுத்தியுள்ளார் என்பதை நேரில் அறியமுடிந்தது! அதுவும் கோரா காட்டன் சாரிகள் செம! அவசியம் கூட்டுறவுத்துறைக்கு உங்கள் ஆதரவை தெரிவியுங்க!

பல ஆண்டு நஷ்டத்திற்குப்பின் முதல் முறையாக சென்ற ஆண்டு இலாபம் ஈட்டியிருக்கும் இந்நிறுவனத்தை ஆதரிப்பது நமது கடமை! அந்நிறுவனம் ஈட்டிய ஒரு கோடி ரூபாய் இலாபத்தை தினமும் ரூ 65 க்கு உழைக்கும் ஏழை நெசவுத் தொழிலாளிகளுக்கு இலாபப்பங்கு மூலம் பிரித்துக்கொடுத்திருக்கிறார் திரு சகாயம் இ.ஆ.ப அவர்கள்.

நமது பணம் யார் கைக்கு செல்கிறது என்பதும் முக்கியமானதுதானே!