மின்சாரம் இல்லையென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்..
// பயனுள்ள தகவல் //
மாலை வீடு திரும்பியவுடன் , வீட்டில் மின்சாரம் இல்லை. மகளிடம் விசாரித்தேன், மூன்று முறை இதுவரை அறிவிக்கப்படாத மின்வெட்டு என தெரிந்துகொண்டு, காலாண்டு தேர்வு விடுமுறையில் உள்ள மகளுக்கும் பயனுள்ளதா ஏதாவது கற்றுக்கொடுக்கலாமே என்று முடிவுசெய்தேன்.
155333 டயல் செய்ய சொல்லி , தமிழில் தகவல் அறிய எண் ஒன்றை அழுத்தவும் என்ற குரலுக்கு ஏற்ப அழுத்திவிட்டு காத்திருந்தாள். அந்தபக்கம் வழக்கமா பேசக்கூடிய நபர் , இன்னும் அரைமணி நேரத்தில் கரண்ட் வந்துவிடும் என சொல்லிவிட்டு டொக்கென்று வைத்துவிட்டார். மறுபடியும் ஃபோன் போட சொன்னேன். புகார் எண் கண்டிப்பாக வேண்டும் என கூறியவுடன்தான் நம் முகவரியையே கேட்க ஆரம்பித்தார். சொன்னபடியே அரைமணிநேரத்தில் மின்சாரமும் வந்தது.
நமக்கு மின்வெட்டு ஏற்பட்டாலே சலித்துக்கொள்கிறோம். நமது கடமை, உரிமை என்னவென்றே தெரியாமல் புலம்புவதை மட்டுமே வாடிக்கையாக கொண்டுள்ளோம். அறியாமையை ஒழிப்போம், விழிப்புணர்ச்சி பெறுவோம்.
இனி மின்வெட்டு ஏற்பட்டால் நீங்கள் டையல் செய்யவேண்டிய எண் 155333, மறவாமல் புகார் எண்ணையும் கேட்டுவாங்கி குறித்துக்கொள்ளுங்கள்.
மேலும் விபரங்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்
http://youtu.be/7TByE86yrt8