Friday, November 29, 2013

ANGRY

ஒரு இளஞ்ஜோடியருக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை பாக்கியமே இல்லை. அதனால் அவர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்தனர். ஒரு நாள் அழகிய நாய் குட்டியை வாங்கி வந்தனர்,அதை தங்கள் மகன் போல வளர்க்க ஆரம்பித்தனர். அந்த நாய் குட்டியும் அவர்களுடன் விளையாடி மகிழ்ந்தது.ஒரு முறை திருடன் அவர்கள் வீட்டிற்கு வந்தபோது தன்னுடைய எஜமானருக்கு விசுவசாமாக நடந்து கொள்ள தன் உயிரையும் பொருட்படுத்தாமால் அவர்களை விரட்டியது. நாட்கள் உருண்டோடின அந்த குட்டி நாய் நல்ல பெரிய நாயாக வளர்ந்தது. 7 வருடம் கழித்து அந்த தம்பதியனருக்கும் ஒரு மகன் பிறந்தான். இப்போதெல்லாம் அந்த குழந்தையுடன் தான் அந்த தம்பதியினர் நேரத்தை செலவிடுகின்றனர் .நாய் இப்போதெல்லாம் தனிமையிலே தன் பொழுதை கழிக்க வேண்டியதாயிற்று. அவர்கள் வளர்த்த நாய்க்கு அந்த குழந்தை மேல் பொறாமை உண்டாயிற்று ஒரு நாள் அந்த தம்பதியினர் குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்து விட்டு மாடியில் நின்று பேசி கொண்டு இருந்தனர். சிறிது நேரம் கழித்து நாயின் சத்தம் கேட்டதும் மேலே இருந்து இறங்கி ஓடி வந்தனர். படி அருகில் நாய் வாயில் ரத்தக்கறையுடன் நின்று கொண்டு இருந்தது.இதைப் பார்த்ததும் அதன் எஜமானர் ஓடி சென்று துப்பாக்க்கியை எடுத்து வந்து நாயை சுட்டு வீழ்த்தினார். பிறகு வீட்டின் உள்ளே சென்று பார்த்த அவர்களுக்கு ஒரே அதிர்ச்சி.குழந்தையின் அருகில் நல்ல பாம்பு இரண்டு துண்டுகளாக கிடந்தது .குழந்தையை காப்பாற்ற அவர்கள் வளர்த்த நாய் அந்த பாம்பை கடித்து போட்டுள்ளது, அந்த பாம்பின் ரத்தக் கறை தான் நாயின் வாயில் இருந்தது என்று அப்போது தான் அவர்களுக்கு புரிந்தது. தங்கள் குழந்தையை காப்பாற்றிய நாயை அநியாயமாக கொன்று விட்டனே என்று கதறி அழுதனர். முன்கோபம் முட்டாள் தனத்தில் போய் முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்து காட்டு. எப்ப நாம ஒரு முடிவு எடுப்பது என்றாலும் நன்றாக ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment