Wednesday, October 23, 2013

PRIBE

லஞ்ச புகார் தெரிவிக்கணுமா...? 

உடனே டயல் பண்ணுங்க காலம் காலமாக மாறாத விஷயங்களில் லஞ்சமும் ஒன்று. யார் ஆட்சிக்கு வந்தாலும் லஞ்சத்தை மட்டும் ஒழிக்க முடியவில்லை. பொதுவாக அரசு துறைகளில்தான் அதிகப்படியான லஞ்சம் அரங்கேறுகிறது. ஒரு சின்ன வேலை செய்வதற்கே லஞ்சம் கொடுத்தால்தான் நடக்கிறது. இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்கள். நீங்களும் லஞ்சத்தால் பாதிக்கப்பட்டவரா... லஞ்சத்தை ஒழிக்க வேண்டுமென்ற நல்லெண்ணம் கொண்டவரா... எங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது என்பது பற்றி புகார் கொடுங்கள். லஞ்ச ஒழிப்புத்துறை நிச்சயம் நல்ல நடவடிக்கை எடுக்கும். 

இதற்காக லஞ்ச ஒழிப்பு துறையை அணுகுவது வெகு சுலபம். புகார்தாரர்கள் நேரடியாகவும், இணைதளத்தின் மூலமாகவும் புகார்களை அனுப்பலாம்..... நீங்களும் புகார் அனுப்ப வேண்டுமெனில் லஞ்ச ஓழிப்பு துறை இயக்குனரகம், என்பிசி 21 மற்றும் 28பி, எஸ்.குமாரராஜா சாலை, (கிரீன்வேஸ் சாலை), ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-28 என்ற முகவரியில் எழுதி அனுப்பலாம். அல்லது 044&24615989, 24615949, 24615929 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது www.dvac.tn.gov.in புகார்களை பதிவு செய்யலாம்.

No comments:

Post a Comment