Tuesday, November 12, 2013

Mangalyan

இந்தியா வறுமை நாடு .இங்கு உள்ளவர்களுக்கு உணவு இல்லை, இருப்பிடம் இல்லை, உறங்க இடமில்லை,சுகாதார வசதி இல்லை. ஏழை நாட்டுக்கு செவ்வாயில் தண்ணீர் இருக்கிறதா, மனிதன் வாழ முடியுமா என்று தெரிந்து என்னாகப்போகிறது என்று கிண்டல் செய்தனர் முன்னாள் விஞ்ஞானிகள் சிலர். இப்போது இந்த மங்கல்யான்   திட்டத்திற்காக 450 கோடி  ருபாய் செலவு செய்ய வேண்டுமா?


 இதற்கு என்ன பதில் ? 

சில ஆண்டுகள்  பினோக்கி செல்வோம்.

நம் நாட்டில் ஊழல் இல்லாத துறையே கிடையாது.

ஊழல் செய்யாத அரசியல்வாதிகளே கிடையாது. 

 வருடம் வாரியாக இடம் பெற்றுள்ள ஊழல் பட்டியல் SCAM LIST 



1948 முதல 2003 வரை  மட்டும் ரூபாய் 91,06,03,23,43,00,000
2003 முதல் 2013 வரை மட்டும்  ரூபாய்  ????????????????????????????????????????
முந்தையதை விட இரு மடங்கு

தொலை காட்சி விவாதம் நடைபெற்ற மற்றும் அனைவரும் அறிந்த சில

1. 2G Spectrum Scam

2. Commonwealth Games Scam

3. Telgi Scam

4. Satyam Scam

5. Bofors Scam

6. The Fodder Scam

7. The Hawala Scandal

8.  IPL Scam

9,10) Harshad Mehta & Ketan Parekh Stock Market Scam


இப்படி நம் நாட்டின் மானத்தை ஒவ்வொரு நாளும் உலக அரங்கில் கப்பலேற்றிக்கொண்டிருக்கும் நம் அரசியல்வாதிகளை விட கோடி மடங்கு 
நம் விஞ்ஞானிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள். 

தமிழ் நாட்டில் 

ஒரு  மாதத்திற்கு நம்முடைய 

குடிமகன்கள் 2000 கோடி ரூபாய்க்கும்

அதிகமாக குடித்து ஒழிக்கிறார்கள்.


 
இன்னொரு பக்கம் வர்த்தக ரீதியாக இந்தியாவுக்கு பலன் கிடைக்கிறது. விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்புவதில், விண்வெளி ஆராய்ச்சிகளுக்கான சாதனங்களை தயார் செய்வது போன்ற விஷயங்களுக்கான உலக சந்தை மதிப்பு என்ன தெரியுமா? 18 லட்சம் கோடி ரூபாய். இந்த சந்தையில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் மட்டும் தான் இப்போது ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 

அதனால் 450 கோடி செலவு வெற்றி பெற இறைவனிடம் பிரார்த்திப்போம்

No comments:

Post a Comment