Thursday, December 19, 2024

வெற்றிலை பாக்கு

 


மீண்டும் வெற்றிலை பாக்கு போடும் பழக்கத்தை ஆரம்பியுங்கள்  அனைவருக்கும் .சொல்லுங்கள் 


மலட்டுத்தன்மை அறவே இல்லை. கேன்சர் இல்லை, 

சர்க்கரை வியாதி இல்லை, 

இதய நோய்கள் இல்லை ..... 

வெற்றிலை பாக்கு போடுவதை கெட்ட பழக்கமாகவும்  சாராயம் குடிப்பதை சாதாரண பழக்கமாகவும் மா(ற்)றிய குடிகாரர்களின் கூடாரமாய் ஆண்மையிழந்து இயலாதவர்களாய்த்  தமிழ்ச் சமூகத்தின் இன்றைய இளைஞர்கள். 


தமிழ்க் கலாச்சாரத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது "தாம்பூலம்" எனப்படும் வெற்றிலை, பாக்கு. தமிழனின் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள அனைத்து சடங்கு சம்பிரதாயங்களிலும் தவறாமல் இடம் பெரும் ஒரு பொருள் வெற்றிலை பாக்கு, வெறும் வெற்றிலை பாக்கு மட்டுமே மாற்றி ஒரு திருமணத்தையே நிச்சயம் செய்து விடுவான் தமிழன்.


வெற்றிலை பாக்கு போட்டு வளர்ந்த தாத்தா பாட்டி காலத்தில் 

கேன்சர் இல்லை, சர்க்கரை வியாதி இல்லை, இதய நோய்கள் இல்லை 

முக்கியமாக மலட்டுத்தன்மை அறவே இல்லை.


ஆக வெற்றிலை, பாக்கு என்பது பல நோய்களைத் தீர்க்கும் ஒரு அருமருந்து என்பது தமிழினத்துக்கு தெரிந்திருந்ததால் தான், அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறான் தமிழன்.


கலாச்சாரச் சீரழிவும், அன்னிய மோகமும் சேர்ந்து தாம்பூலத்தைக் கெட்ட பழக்கமாக சித்தரித்து நம் இனத்தை நோயாளிகளாய் அலைய விட்டிருக்கிறது.


வெற்றிலையின் மகத்துவத்தை தமிழனை மறக்கடிக்கச் செய்து தம்பதிகளை fertility Centre ( கருத்தரிப்பு மையம்)களை நோக்கி படையெடுக்க வைத்திருக்கிறது.


வாயில் கேன்சர் வந்திடும், பல்லு கரை போகவே போகாது, தவிர "டேய்.. இன்னும் பழைய ஆள் மாதிரி வெத்தலையை போட்டு கிட்டு..

எனச் சொல்லிச் சொல்லியே வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் நம்மிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைக்கப்பட்டு விட்டது.


வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு அதிலும் கல் சுண்ணாம்பு, முத்துச்சிப்பி சுண்ணாம்பு என வித்தியாசம் காட்டி அது மட்டுமா ஏலக்காய், கிராம்பு, சாதிக்காய், என வாசனைப் பொருட்கள் கலந்து வாயில் இட்டு சுவைத்து, முதலில் ஊறும் நீரும், இரண்டாவது ஊறும் நீரையும் துப்பிவிட வேண்டும் என்றும், மூன்றவதாய் ஊறும் நீரே அமிர்தம் என தாம்பூலம் இட்ட வழி முறைகள் சொன்ன சித்த மருத்துவம் இருந்த ஊரில், "ஆங்.. தாம்பூலமா அப்படின்னா?", எனக் கேட்கும் அடுத்த தலைமுறை வந்து விட்டது,


பெருகி வரும் ஆண் மலட்டுத் தன்மை குறிப்பாக விந்தணு உற்பத்தி மற்றும் அதன் Motility குறைதல் இவற்றுக்கு தாம்பூலம் மிக சிறந்த மருந்து.

வெற்றிலையில் உள்ள Hydroxy Chavicol எனும் Phenol Compound ஆனது ஆண்களின் Prostate-ஐ வலுப்படுத்துகிறது, மேலும் Prostate புற்று வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது,


விதைப்பையில் உற்பத்தியாகும் விந்தணுவிற்கு  Prostate-ல் இருந்து சுரக்கும் நீரில் உள்ள Zinc மூலம் தான் உயிரே கிடைக்கிறது, அதாவது Motility உண்டாகிறது, IVF நிகழ்வில் விந்தின் Capacitation நிகழ்வும் முக்கியம், அந்த Capacitation நடக்க Prostate சுரப்பு ரொம்ப முக்கியம் , இதையெல்லாம் தெரிந்ததால் தானோ என்னவோ காதல் மனைவி ஊட்டி விடும் தாம்பூலத்தைச் சிலாகித்துப் பேசியிருக்கிறார்கள் போல,

மலச்சிக்கலா, தாம்பூலத்துடன் கொஞ்சம் அதிகம் பாக்கைச் சேர், வாய் நாற்றமா, லவங்கத்தைச் சேர், வீரியம் வேண்டுமா, சாதிக்காய் சேர் எனச் சொன்ன தமிழ்ச் சமூகம் இன்று Infertility center-களில் முடங்கி கிடக்கிறது.


அடுத்த தலைமுறைக்கு இனியாவது தாம்பூலத்தின் மகத்துவத்தை எடுத்துரைப்போம்...!!

Monday, December 2, 2024

மருத்துவர்

 

.ஏமாற்றி பிழைக்கும் மருத்துவ உலகம் ! ‌‌  

- டாக்டர். பிரதீப் அகர்வால்......



கறுப்பு பணம் சம்பாதிக்கும் வழிகள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் !...

ஏன் ரூபாய் நோட்டு தடையும் தேவை ?


 நான் ஒரு மருத்துவர்; அதனால்தான்

 "அனைத்து நேர்மையான மருத்துவர்களிடமும், முதலில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு எழுதுகிறேன்...!"


மாரடைப்பு ஏற்பட்டுள்ளது !  எனில், 

மருத்துவர் கூறுகிறார் -

 Streptokinase ஊசி போடுங்கள்...  என்று. அதற்கு, ரூ. 9,000/ ரூபாய்... என்கின்றனர். ஆனால், ஊசியின் உண்மையான விலை ரூ. 700/ - முதல் 900/- வரை மட்டுமே. ஆனால் MRP ரூ. 9,000/-  !... .

அப்பாவி மக்கள்,  என்ன செய்வார்கள் ? ....


டைபாய்டு வந்தது… எனில், 

மொத்தம் 14 மோனோசெஃப் எடுக்கப்படும் !  மொத்த விற்பனை விலை ரூ 25/- ... ஆனால், மருத்துவமனையின் வேதியியலாளர் ரூ.53/- விலைக்கு தருகிறார்...  

மக்கள் என்ன செய்வார்கள் ??


சிறுநீரகம் செயலிழந்து விட்டது..

மூன்று நாளுக்கு ஒருமுறை டயாலிசிஸ் செய்யப்படுகிறது.., டயாலிசிஸ் முடிந்து ஒரு ஊசி போடப்படுகிறது .  MRP அனேகமாக ரூ.1800/-  !

அதை மொத்த சந்தையில் இருந்து எடுக்க எண்ணினால்,  இந்தியா முழுவதும் தேடினாலும் எங்கும் கிடைக்காது ... ஏன் ?

மருந்து நிறுவனம், மருத்துவருக்கு மட்டுமே சப்ளை செய்கிறது !!

 அந்த இன்ஜெக்க்ஷனின் அசல் விலை ரூ. 500/- மட்டுமே, ஆனால் மருத்துவர், தனது மருத்துவமனையில் ரூ.1800/- க்கு தருகிறார்.  

மக்கள் என்ன செய்வார்கள் ??


நோய் தொற்று ஏற்பட்டு விட்டது..!  மருத்துவர் எழுதிய ஆன்டிபயாடிக் விலை ரூ.540/- 

அதே மருந்து மற்றொரு நிறுவனத்தில் ரூ. 150/- மற்றும் ஜெனரிக் விலை ரூ. 45 /-- 

ஆனால் வேதியியலாளர் மறுக்கிறார்.., நாங்கள் ஜெனரிக் அல்லது மற்ற நிறுவனங்களைத் சார்ந்தவற்றைத் தர மாட்டோம்.., என்பார்; 

மருத்துவர் எழுதிக் கொடுத்ததை மட்டும் கொடுப்பார்கள்... அதாவது 540/- ?  

மக்கள் என்ன செய்வார்கள் ??


சந்தையில்  அல்ட்ராசவுண்ட் பரிசோதனை 750/- ரூபாயில் உள்ளது., 

அறக்கட்டளை மருந்தகம் 240/- ரூபாயில் தருகிறது ! எனவே,  ரூ. 750/- யில், மருத்துவர் கமிஷன் 300/- ரூபாய் !


எம்ஆர்ஐயில்,  டாக்டர் கமிஷன் ரூ. 2,000/- முதல் 3,000/= வரை !


 டாக்டர்கள் மற்றும் மருத்துவமனைகளின் இந்த கொள்ளை, இந்த களியாட்டம், அச்சமின்றி, இந்நாட்டில் சர்வசாதாரணமாக நடக்கிறது!


மருந்துக் கம்பெனிகளின் லாபி, நாட்டையே நேரடியாகப் பிணயக் கைதியாக வைத்திருக்கும் அளவுக்கு வலிமையானது !


 மருத்துவர்களும், மருந்து நிறுவனங்களும் கூட்டு கொள்ளையிடுகின்றன !. .. இருவருமே அரசாங்கத்தை பிளாக்மெயில் செய்கிறார்கள்...!!


இதில், மிகப்பெரிய கேள்வி...

ஊடகங்கள் இதைக் காட்டாமல், இரவும் பகலும் வேறு என்னத்த காட்டுகின்றன ?.... .  


குழியில் விழுந்த இளவரசன்..,  டிரைவர் இல்லாத கார், ராக்கி சாவந்த், பிக்பாஸ்,      மாமியார் மருமகள் சூழ்ச்சி, க்ரைம் ரிப்போர்ட், கிரிக்கெட் வீரரின் கேர்ள் பிரெண்ட், இதையெல்லாம் காட்டுகிறார்கள். 


ஆனால்...   டாக்டர், மருத்துவமனை மற்றும் மருந்து நிறுவனங்களின்  வெளிப்படையான கொள்ளையை ஏன் காட்ட வில்லை ?.....  

ஊடகங்கள் காட்டவில்லை என்றால், வேறு யார் காட்டுவார்கள் ?

பின்னர் எப்படி மருத்துவ லாபியின் கொடுமை நிறுத்தப்படும் ?

இந்த லாபி.... அரசாங்கத்தையே.... கையாலாகாத நிலையில் வைத்திருக்கிறதா ?

 ஊடகங்கள் மௌனமாக இருப்பது ஏன் ?


 ரூ. 20/- கூடுதலாக கேட்டால்  ஆட்டோரிக்க்ஷாகாரரிடம், மக்கள் எகிறுவார்கள்,..!  ஆனால்,

 கொள்ளையிடும்

 டாக்டரை என்ன செய்வார்கள் ???


இது உண்மை என்று நீங்கள் நினைத்தால், அனைவருக்கும் அனுப்புங்கள்!  விழிப்புணர்வை கொண்டு வாருங்கள்; மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த உங்கள் ஆதரவை வழங்குங்கள் !!!....


இலட்சிய சமூகத்தை உருவாக்குபவர்கள்

 சிந்தனை மாற்றம்.  .  .  .  .  வேண்டுகோள்:- இந்தியன்


 நீங்கள் ஐந்து பேருக்கு அனுப்புங்கள்;

அந்த ஐந்து பேர் கண்டிப்பாக அடுத்த ஐந்து பேருக்கு அனுப்பட்டும்!  

க ஐந்து ஐந்தாக அனுப்பினால், அதைக் கண்டு நாடே ஒன்றுபடும்.


Thursday, November 7, 2024

ANBU

எண்ணம்

 சிலருக்கு நம்மை பிடிக்காமல் போவதற்கு காரணம் நம் குணம் சரியில்லை என்று அர்த்தமில்லை. அவர்களின் குணத்திற்கு ஏற்றார் போல் நாமில்லை என்பதாகும். 

அனுபவசாலி

 அனுபவசாலி என்பவர் அதிகமானவற்றை அடைந்தவற்றை விட, அதிகமானவற்றை இழந்தவராகவே இருக்கிறார்.


அனுபவத்திடம் அறிவுரையை கேட்டுக்கொள்ளுங்கள். கற்றதை விட பட்டதை எடுத்துச் செல்வார்கள்.


அனுபவம் சில காயங்களை தந்துவிட்டுத் தான் நிதானத்தைக் கற்றுக்கொடுக்கும்.


அனுபவம் இல்லாத வாழ்க்கையும் அனுபவிக்காத வாழ்க்கையும் வீண்தான்.